கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.12¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.12¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கடத்தூர்
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 6 ஆயிரத்து 930 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் கதலி வாழைப்பழம் கிேலா ஒன்று ரூ.60-க்கும், நேந்திரன் ரூ.45-க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.600-க்கும், தேன்வாழை ரூ.750-க்கும், செவ்வாழை ரூ.1,050-க்கும், ரஸ்தாளி ரூ.660-க்கும், மொந்தன் ரூ.310-க்கும், ரொபஸ்டா ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.460-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் மொத்தம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல் 7 ஆயிரத்து 700 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் தேங்காய் ஒன்று ரூ.7 முதல் ரூ.14 வரை விற்கப்பட்டது. தேங்காய் மொத்தம் ரூ.80 ஆயிரத்து 400-க்கு ஏலம் போனது.