வாழைமரங்கள் சாய்ந்தன

திருவையாறு பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் விழுந்து சேதம் அடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.;

Update: 2023-09-18 19:44 GMT

திருவையாறு பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் விழுந்து சேதம் அடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சூறாவளி காற்றுடன் மழை

தஞ்சை மாவட்டத்தில், காவிரி சமவெளி பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் வளப்பக்குடி, சாத்தனூர், வடுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில், 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் தார்பிடித்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

விவசாயிகள் வேதனை

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், இதுபோன்று பருவ மழை பெய்யும் காலங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இது போன்று நடைபெறுவதனால் தமிழக அரசு அரசிடம் கோரிக்கையாக பயிர் காப்பீடு செய்வது போல வாழைக்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் தோட்டகலைத்துறை சார்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்