அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.

Update: 2022-06-26 21:48 GMT

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைப்பழம் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 1,450 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி வாழைப்பழம் (கிலோ) 58 ரூபாய்க்கும், நேந்திரன் 48 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார்) ரூ.720-க்கும், செவ்வாழை ரூ.850-க்கும், ரஸ்தாளி ரூ.680-க்கும், தேன்வாழை ரூ.750-க்கும், மொந்தன் ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைப்பழத்தார்கள் மொத்தம் ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்