சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் வாழை நடும் போராட்டம்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் வாழை நடும் போராட்டம் நடத்தினர்.
குலசேகரம்,
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் வாழை நடும் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
பேச்சிப்பாறை - கோதையாறு சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதா எஸ்.டி. அணி சார்பில் சீரோ பாயின்ட் சந்திப்பில் நேற்று வாழை நடும் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மேல்புறம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா எஸ்.டி. அணி தலைவர் முத்துக் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் மனோகரன், மாவட்ட செயலாளர் சுடர்சிங், மேல்புறம் வடக்கு ஒன்றியத் தலைவர் சதீஷ் சந்திரன், துணைத் தலைவர் சந்தோஷ் குமார், கடையல் பேரூராட்சி எஸ்.டி. அணி தலைவர் சந்திரன், பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் உள்ள குழிகளில் வாழை மரங்களை நட்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் மீன்பிடி போராட்டமும் நடத்தினர்.