வாழை தோட்டத்திற்கு தீவைப்பு

சாயர்புரம் அருகே வாழை தோட்டத்திற்கு தீவைக்கப்பட்டது.

Update: 2023-04-30 19:00 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள கட்டாலங்குளம் பஞ்சாயத்து உட்பட்ட மாரியம்மன் கோவில் அருகே சுசீலா என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை தோட்டத்திற்கு நேற்று மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.

இதில் சொட்டுநீர்குழாய்கள், மற்றும் வேலிகள் எரிந்து சாம்பலானது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்