வாழை தோட்டத்திற்கு தீ வைப்பு
சாயர்புரம் அருகே வாழை தோட்டத்திற்கு தீ வைக்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள கட்டாலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்மாள் கோவில் அருகே செந்தியம்பலம் ஊரை சேர்ந்த அருணாசலம் நாடார் மகன் கந்தசாமி என்பவர் 7 ஏக்கர் இடத்தில் கட்டு குத்தகைக்கு வாழை பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் அந்த வாழை தோட்டத்திற்கு தீ வைத்துள்ளனர். இந்த தீ மளமளவென பரவியது. பக்கத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வாழை பயிர்கள், வேலிகள், சொட்டுநீர் குழாய்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டது. இதன் மதிப்பு சுமார் 4 லட்ச ரூபாய் இருக்கும் என விவசாயி கந்தசாமி வேதனையுடன் தெரிவித்தார்.