தேனி, மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம்
அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் என வனத்துறை அறிவித்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில்' அரிக்கொம்பன்' காட்டுயானை நடமாட்டம் காரணமாக மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தங்கும் விடுதிகளில் தங்கியவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்த அரிக்கொம்பனை வனத்திறையினர் மயக்க ஊசி மூலம் பிடித்து நெல்லை மாவட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள அகத்தியமலை யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியான குற்றியாறு வனப்பகுதியில் விட்டனர். .
அரிக்கொம்பன் யானை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், தேனி மாவட்டம் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.