கல்லூரி கேண்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்கள் விற்க தடை - யு.ஜி.சி. உத்தரவு

கல்லூரி கேண்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்கள் விற்க தடை விதித்து யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-07-17 19:22 GMT

சென்னை,

பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 4-ல் ஒருவருக்கு உடல்பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை போன்ற பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உடல்நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்.ஏ.பி.ஐ.) கேட்டுக்கொண்டுள்ளது.

அதனை அடிப்படையாக வைத்து உயர்கல்வி நிறுவனங்களில் (கல்லூரி கேண்டீன்களில்) ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்கக்கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்ட உதவி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்