பழனியில் இறைச்சி விற்க தடை

மகாவீர் ெஜயந்தியைெயாட்டி பழனி நகராட்சி பகுதியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-02 19:00 GMT

பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியையொட்டி கோழி, ஆடு, மாடு போன்றவற்றை வதை செய்வதும், அதன் இறைச்சி மற்றும் மீன் விற்கவும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் பழனி நகர் பகுதியில் அனைத்து இறைச்சி கடைகள் மூட வேண்டும். அதேபோல் நகராட்சி ஆட்டிறைச்சி கூடமும் அன்று செயல்படாது. அரசின் உத்தரவை மீறி யாரேனும் இறைச்சி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்