22 டன் நெல் விதைகள் விற்க தடைசுத்திகரிப்பு நிலையத்தில் துணை இயக்குனர் ஆய்வு:

சுத்திகரிப்பு நிலையத்தில் துணை இயக்குனர் ஆய்வு செய்த பின்னா் :22 டன் நெல் விதைகளை விற்க தடை விதித்தாா்

Update: 2023-09-28 23:04 GMT




ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில் பவானி, கோபி ஆகிய பகுதிகளை சேர்ந்த விதை ஆய்வாளர்கள் அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் குழு ஆய்வு செய்தனர். அப்போது முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை விதைப்பட்டியல், விதை இருப்பு பதிவேடுகள், விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது விதை சட்டப்படி விதிமீறல் காணப்பட்ட, ரூ.6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான 22 டன் நெல் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து துணை இயக்குனர் சுமதி, விதை சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்களிடம் கூறும்போது, 'விதை இருப்பு, விதையின் ஈரப்பதம் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பூச்சிகள் தாக்காமல் விதைகளை பாதுகாக்க வேண்டும். விதை விற்பனை நிலையங்களில் கட்டாயம் விதை இருப்பு அளவு குறித்த தகவல் பலகை தினமும் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இதுபோன்று விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் விதை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்