உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 5 கடைகளின் விற்பனைக்கு தடை

உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 5 கடைகளின் விற்பனைக்கு தடை செய்யப்பட்டது.

Update: 2022-10-19 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்களை மாவட்ட நிர்வாகம் பெற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர நிலையங்களில் இருப்பு வைத்துள்ளது. இந்நிலையில் கலெக்டரின் ஆணைக்கிணங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். உர விற்பனை நிலையங்களில் அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் உர மூடைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உர விலைப்பட்டியல் அறிவிப்பு பலகையுடன் உர இருப்பு விவரம் விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் வைத்திருக்க வேண்டும். உர விற்பனையை விற்பனை முனை எந்திரம் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும், விற்பனை செய்யப்படும் உரங்களுக்கான உரிய ரசீதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், இருப்பு மற்றும் உண்மை உர இருப்பு சரியாக இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உரக்கட்டுப்பாடு சட்டத்தினை மீறிய 5 உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 7 நாட்களுக்கு விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்