பழுதடைந்த 2 அரசு பஸ்களை இயக்க தடை

வால்பாறையில் பழுதடைந்த 2 அரசு பஸ்களை இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டார்.

Update: 2022-09-15 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் பழுதடைந்த 2 அரசு பஸ்களை இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டார்.

பழுதடைந்த பஸ்கள்

வால்பாறை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பல அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும் போது சில பஸ்களுக்குள் ஒழுகு கிறது. மேலும் இருக்கைகள் சரியாக பொருத்தப்படாமல் கிழிந்து உள்ளது.

எனவே எஸ்டேட் பகுதிகளுக்கு தரமான பஸ்களை வேண்டும். பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க வேண் டும் என்று வால்பாறை பகுதி மக்கள் அரசுக்கும், கோவை மாவட்ட கலெக்டருக்கும் புகார் அளித்து வந்தனர்.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவ லர் முருகானந்தம் நேற்று வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு பஸ்களில் ஏறி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த பஸ்சில் பயணிகள் இருக்கைகள் கிழிந்து பயணிகள் உட்கார முடியாத அளவிற்கும், மேற்கூரை உடைந்த நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மற்றொரு அரசு பஸ்சில், படிக்கட்டுகள் உடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 2 அரசு பஸ்களையும் இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உத்தரவிட் டார்.

மேலும் அந்த பஸ்களில் குறைபாடுகளை சரி செய்து ஆய்விற்காக காண்பித்த பிறகு தான் இயக்க வேண்டும் என்று வால்பாறை அரசு பஸ் டெப்போ கிளை மேலாளருக்கு உத்தரவிட்டார்.

சரி செய்ய உத்தரவு

மேலும் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்த அனைத்து பஸ்களிலும் பக்கவாட்டில் உடைந்த தகரங்கள், கம்பிகள் வெளியே ஆபத்தான வகையில் நீட்டிக் கொண்டு இருந்தன.

அந்த குறைகளை உடனடியாக சரி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர், வால்பாறை அரசு பஸ் டெப்போவில் இருந்து இயக்க கூடிய அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிக்குமாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்