நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க தடை
நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
ராமேசுவரம்,
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், கடல் சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வருகின்ற 10-ந் தேதி வரையிலும் மீனவர்கள் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.