திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இ;
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது.
பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளது. மழை குறைந்ததையடுத்து பேச்சிபாறை அணையிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இன்று பேச்சிபாறை அணையில் இருந்து 316 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது.
விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டி யதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.