திருவாரூரில் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை

திருவாரூரில் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-20 19:15 GMT

திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வருகை தர உள்ளார். முதல்-அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களை கருதி திருவாரூர் மாவட்ட பகுதிகளில் இன்று, நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்