தியாகதுருகத்தில் பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

தியாகதுருகத்தில் பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

Update: 2023-10-05 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஏழுமலை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். பேரணியை தொடங்கி வைக்க கள்ளக்குறிச்சி பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தியாகதுருகம் போலீசார் பேரணி நடத்த அனுமதி இல்லை என கூறினார். அதற்கு பா.ம.க.வினர் அமைதியான முறையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி கொள்கிறோம். எனவே இங்கிருந்து பஸ் நிலையம் வரை பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால் போலீசார் மாவட்டம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இதனை ஏற்ற பா.ம.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணியை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது நகர செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் துரை, முருகன், நாராயணன், ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்