போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து நிற்கும் மூங்கில் மரங்கள்

திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து நிற்கும் மூங்கில் மரங்களை உடனியாக அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-01 18:37 GMT

திருவாரூர்;

திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து நிற்கும் மூங்கில் மரங்களை உடனியாக அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன போக்குவரத்து

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. தஞ்சை-நாகை செல்லும் பிரதான சாலை என்பதால் அதிகமான வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த சாலை நீண்ட காலமாக மிகவும் பழுதடைந்து பல இடங்களில் கப்பிகள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது.

வெட்டி அகற்ற கோரிக்கை

இந்தநிலையில் திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மூங்கில் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த மூங்கில் மரங்கள் நேற்று பெய்த மழை, காற்றினால் சாலை பகுதியில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் இந்த மூங்கில் மரத்தின் மோதி செல்கிறது. இந்த இடத்தில் இரு கனரக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள மூங்கில் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்