மூங்கில் அகற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மூங்கில் அகற்றப்பட்டது.

Update: 2023-05-24 22:00 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரம்பாடியில் இருந்து சுங்கம், கையுன்னி வழியாக சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் எருமாடு அருகே கப்பாலாவில் சாலையோரத்தில் சாய்ந்து விழும் நிலையில் மூங்கில் இருந்தது. இதனால் மூங்கில் கிளைகள் வாகனங்களில் உரசும் வகையில் தொங்கி கொண்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து அபாயகரமான மூங்கிலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர், போலீசார் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் மூங்கிலை அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்