பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னங்கல் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் வின்சென்ட் (வயது 44), இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கடந்த வருடம் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் பஸ் நிலையம் அருகே வின்சென்ட் சுற்றிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.