மகாமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மயிலாடுதுறை அருகே மகாமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-31 18:45 GMT

மயிலாடுதுறை அருகே ராதாநல்லூர் பில்லாலி கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. இதையொட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கோட்டூர் காவிரி கரையில் இருந்து பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் மேள, தாளங்கள் முழங்க கரகம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அணிவித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா இரவு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்