மகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

குத்தாலம் மகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது

Update: 2023-08-05 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் பால்குடம் விழா நடந்தது. முன்னதாக காவிரி தீர்த்தப்படித்துறையில் இருந்து சக்தி கரகம், அழகு காவடி, அலங்கார காவடிகளை பக்தர்கள் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை காளியம்மன் கோவில் தெருமக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்