கிருஷ்ணகிரி பழையபேட்டைஏகாம்பரேஸ்வர காமாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாபெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

Update: 2023-07-22 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம கோவில் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோ-பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து பெண்கள் பால்குட ஊர்வலமாக எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், வழங்கப்பட்டது. இரவு சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்