பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் திருவிழா

பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-01-17 18:30 GMT

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே எலவனூரில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி முருகன் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்தனர். அதேபோல் இரவு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேங்கை மரத்தாலான குழந்தை வடிவிலான பாலதண்டாயுதபாணி சிலைக்கு அலங்காரம் செய்து சப்பாரத்தில் அமர வைத்து ஒவ்வொரு வீடாக சென்று பூஜை செய்து மீண்டும் கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதில் திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டு கொரணா பாதிப்பால் ஒவ்வொருவர் வீடுகளுக்கும் கொண்டு செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்