விருதுநகர் மாணவிக்கு பாலபுரஸ்கார் விருது

விருதுநகர் மாணவிக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

Update: 2023-02-20 19:05 GMT


விருதுநகரை சேர்ந்த டாக்டர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியினரின் மகள் விஷாலினி. இவர் ஐதராபாத் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீட்டை கண்டுபிடித்த மாணவி விஷாலினிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் பால புரஸ்கார் விருதும் ரூ. 1 லட்சம் பரிசு தொகையும் வழங்கி பாராட்டினார். நேற்று கலெக்டர் ஜெயசீலன் மத்திய அரசு அனுப்பி வைத்த பால புரஸ்கார் விருது, சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி மாணவி விஷாலினியை பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்