பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;

Update: 2023-08-23 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு யாக பூஜைகள் நடந்தது. யாக வேள்விகளை சேவகபெருமாள் அய்யனார் கோவில் பரம்பரை ஸ்தானிகர் சேவற்கொடியேன் சிவாச்சாரியார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நடத்தினர். இதையடுத்து மேளதாளங்கள் முழங்க கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடக்கு வேளார் தெரு பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்