உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவிலில் பாலாலயம்
உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
சமயபுரம், செப்.10-
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலாக விளங்குவது மாகாளிகுடி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவில். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பாலாலயம் நடைபெற்றதால் கோவிலில் அம்மனுக்கு நடைபெறும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவடைந்த பிறகு பழிபூஜை மற்றும் பூஜைகள் நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.