கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.;

Update:2023-09-13 00:15 IST

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும்.. யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் இந்த கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதனையொட்டி கோவிலில் யாக பூஜை நடந்தது. பின்னர் மகா பூர்ணா குதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டு பாலாலயம் நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்