பால கணபதி கோவில் குடமுழுக்கு விழா
குத்தாலம் நாயக்கர் தோ ட்டத்தில் பால கணபதி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் நாயக்கர் தோட்டத்தில் பாலகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. விழாவை யொட்டி கடந்த 10-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடை பெற்றது. கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.