பேக்கரி ஊழியர் வலிப்பு நோய்க்கு பலி

பேக்கரி ஊழியர் வலிப்பு நோய்க்கு பலியானார்.

Update: 2022-09-12 18:14 GMT

அரியலூர் மாவட்டம், சிறுவளூர் காலனி தெருவை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது 28). இவர் வி.கைகாட்டியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த ரத்தினகுமார் பேக்கரி கடையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து முதலுதவி செய்வதற்கு முயற்சி செய்தனர். மேலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் ரத்தினகுமார் அங்கேயே இறந்து விட்டார். பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரத்தினகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த ரத்தினகுமாருக்கு, இளவரசி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்