பேக்கரி ஊழியர் கிணற்றில் மூழ்கி பலி
சோளிங்கர் அருகே பேக்கரி ஊழியர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோதை குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 31). இவருக்கு திருமண மாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் மோட்டூர் கிராமத்தில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். மாலை நேரங்களில் பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று உடன் பணிபுரிவர்களுடன் குளிக்க சென்ற அவர் கிணற்றி முழ்கிவிட்டார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
அதைத்தொடர்ந்து நேற்று அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 17 பேர் கொண்ட குழுவினர் சென்று ஸ்ரீகாந்த் உடலை மீட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.