பைக்கில் அதிவேக பயணம் - சரணடைந்த யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்
இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்ததனை அடுத்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கோவை,
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அதை யூ டியூப்பில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார்.150 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும், இவருக்கு பின்னால் அமர்ந்துள்ள ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது
இதனையடுத்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் மீது 2 வழக்கு,சூலூர் காவல் நிலையத்தில் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது,இந்நிலையில் நேற்று யூடியூபர் டி.டி.எப் வாசன் மதுக்கரை கோர்ட்டில் சரணடைந்தார். இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்ததனை அடுத்து மாலை அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.