திருப்பூர் குமரன் ரோடு புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் பைபிள் திருவிழா நேற்று நடைபெற்றது. பைபிள் திருவிழாவில் பங்கில் உள்ள அன்பியங்கள், அன்பிய பொறுப்பாளர்கள், அன்பிய மக்கள் ஸ்டால்கள் அமைத்து இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை காட்சிகளாக நடித்து காட்டினர். இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை உருவங்களாக உருவாக்கியும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கண் முன்னே நிகழ்த்தி காட்டினார்கள். விழாவை பங்குத்தந்தை அருள் ஜெபமாலை மற்றும் பங்கின் உதவி பங்கு தந்தை அருள் சந்தோஷ் ஆகியோர் வழி நடத்தினா். பங்கு பேரவையின் உதவித்தலைவர் டோனி, செயலாளர் வினோத், பொருளாளர் பீட்டர் ஜான், துணை பொருளாளர் இருதயராஜ், பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு பேரவை நிர்வாகிகள் அனுப்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.