பாகலஅள்ளி ஊராட்சி தலைவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

பாகலஅள்ளி ஊராட்சி தலைவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-08-23 19:30 GMT

நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் (வயது 48). இவர், சவுளூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர், தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. அதனை 3 பேர் கும்பல் திருடி சென்றது. இதைக்கண்ட முருகன், திருடர்களை பிடிக்க சென்றார். உடனே திருடர்கள், அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு முருகன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முருகன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே திருடர்கள் போட்டு விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு உரியதா அல்லது அதுவும் திருட்டு மோட்டார் சைக்கிளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்