புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் படுகள நிகழ்ச்சி

புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-07-09 20:10 GMT

பெத்தநாயக்கன்பாளையம்

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி கூத்தாண்டவர் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலைவிரி கோலத்தில் நடனம் ஆடினர். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது. பின்னர் குழந்தை வேண்டி ஏராளமான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து ஆற்றங்கரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தை பெற்று சாமியை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்