பத்தமடை அய்யனார் கோவில் குடமுழுக்கு
நாகை அருகே பத்தமடை அய்யனார் கோவில் குடமுழுக்கு
நாகை மாவட்டம் பாப்பாகோவிலை அடுத்த குடிநெய்வேலி கிராமத்தில் பத்தமடை அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு விழா நடந்தது. விழாவையொட்டி கணபதி ேஹாமம், யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோவில் கலசத்துக்கு புனித நீரும், விஸ்வநாதர், விசாலாட்சி, காத்தவராயசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதி கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.