மோசமான வானிலை:கோவையில் தரையிறங்கிய மதுரை விமானம்
மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறங்கிய மதுரை விமானம்.
ஐதராபாத்தில் இருந்து தனியார் விமானம் நேற்று மாலை 6.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால் மதுரையில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், அந்த விமானத்தை மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விமானம் கோவை சென்று அங்கு இரவு 7.20 மணியளவில் தரையிறங்கியது.
இதனால் ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு பயணம் செய்த 221 பயணிகளும் கோவை விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.
பின்னர், எரிபொருள் நிரப்பிய பின் மீண்டும் 221 பயணிகளுடன் அந்த விமானம் இரவு 8.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.