சாம்பவர்வடகரையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்ததால் பரபரப்பு

சாம்பவர்வடகரையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-05-20 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே சாம்பவர்வடகரை நகர பஞ்சாயத்துக்குட்பட்ட சிவந்திநகர் பகுதி மாஞ்சோலை தெருவில் உள்ள முட்புதரில் நேற்று காலை பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சாம்பவர்வடகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பிறந்து 10 நாட்களுக்கும் மேலான அந்த குழந்தையின் உடலில் நாய்கள் கடித்து குதறி இருந்தன. அதை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை இறந்ததால் அங்கு வீசிச் சென்றார்களா? அல்லது நாய்கள் கடித்துக் குதறியதால் குழந்தை இறந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்