கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
பழவூர் அருகே ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.;
வடக்கன்குளம்:
பழவூர் அருகே பஞ்சல் கடற்கரை பகுதியில் வனத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட ஆமை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொறித்தன. மொத்தம் 90 ஆமை குஞ்சுகளை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன், வனச்சரக அலுவலர் சரவணகுமார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் விட்டனர்.