குருபரப்பள்ளி அருகேபிறந்த ஒரே நாளில் பெண் குழந்தை திடீர் சாவுபோலீசார் விசாரணை

குருபரப்பள்ளி அருகே பிறந்த ஒரே நாளில் பெண் குழந்தை திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-10-16 19:00 GMT

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே பிறந்த ஒரே நாளில் பெண் குழந்தை திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறைமாத கர்ப்பிணி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் பகுதியை சேர்ந்தவர் செம்பருத்தி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செம்பருத்தி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 14-ந் தேதி இரவு அவருக்கு 3-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் அந்த பெண் குழந்தை திடீரென இறந்து விட்டது. இது தொடர்பாக நாச்சிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் காயத்திரி குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுமித்ரா வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 3-வதாக பிறந்த பெண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிறந்த ஒரே நாளில் பெண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்