தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் சாவு

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் உயிரிழந்தது.

Update: 2022-08-30 08:19 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த வாலிபர் ஒருவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஆப்பிரிக்காவில் வாழும் 2 குரங்கு குட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. அவைகள் மயங்கிய நிலையில் இருந்தது. இந்த குரங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப முடிவு செய்து வனவிலங்கு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது 2 குட்டிகளும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருப்பி அனுப்ப முடியாததால் அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் தகனம் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்