குப்பை தொட்டியில் பெண் சிசு உடல் வீச்சு

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குப்பை தொட்டியில் பெண் சிசு உடல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-12-03 16:37 GMT

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு, மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக வருகின்றனர். தினமும் இங்கு 15-க்கும் மேற்பட்ட பிரசவம் நடக்கிறது. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளையும் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கிடந்த குப்பைகளை அகற்றினர். அப்போது ரத்த வங்கிக்கு எதிரே உள்ள குப்பை தொட்டியில் ஒரு பச்சிளம் பெண் சிசுவின் உடல் கிடந்தது.

அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள், இதுபற்றி டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு நத்தம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளார். அவருக்கு குறைபிரசவத்தில் பெண் குழந்தை இறந்து பிறந்தது.

இதையடுத்து சிசுவின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. ஆனால் குறை பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தை என்பதால் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல விரும்பாமல், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து சிசுவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்ததோடு, டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து சிசுவின் உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்