கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் பெண் சிசு வீச்சு

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் பெண் சிசு வீசப்பட்டது.

Update: 2022-10-23 18:45 GMT

மானாமதுரை, 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பைபாஸ் ரோட்டில் கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது. இதன் அருகே மழைநீர் மற்றும் கழிவுநீர் ெசல்லும் கால்வாய் உள்ளது. நேற்று இவ்வழியாக பொதுமக்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுற்றி உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது அங்கிருந்த 3 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயின் உள்ளே பிறந்து 20 நாட்களே ஆன ெபண் சிசு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த பெண் குழந்தைக்கு கால்களில் காயம் இருந்தது. தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி சென்றவர்கள் யார்? எதற்காக குழந்தையை விசி சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்