வால்பாறையில் 108 ஆம்புலன்சில் ெபண்ணுக்கு பிரசவம்

வால்பாறையில் 108 ஆம்புலன்சில் ெபண்ணுக்கு பிரசவம்

Update: 2023-07-16 19:15 GMT

வால்பாறை

வால்பாறை அருகில் உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 25).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் வினோத் குமார் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர் தேவிகலா இருவரும் நள்ளிரவு 1.30 மணியளவில் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதிக்கு சென்றனர். பின்னர் லட்சுமியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வரும் வழியில் பிரசவ வழி அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து தேவிகலா, லட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து தாய் -குழந்தை இருவரையும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்