குப்பை தொட்டியின் அருகில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை

வாலாஜா அரசு மருத்துவமனையில் குப்பை தொட்டியின் அருகில் பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது.

Update: 2023-08-23 19:17 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைத்தொட்டி ஒன்றின் அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்