சிறுமிக்கு ஆண் குழந்தை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது

ஆலங்குளம் அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக அவளுடைய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Update: 2023-07-31 18:45 GMT

ஆலங்குளம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிரசவத்திற்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தையின் தந்தை குறித்து மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவருடைய தந்தை என்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்