குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-06-22 19:14 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்து 60 குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினார்,

அப்போது நமது மாவட்டத்தை பொருத்தவரையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதம் முதல் 2 வயது வரை மற்றும் இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் 849 பேர் உள்ளனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களை உறுதி செய்கின்ற வகையில் உணவுகளை வழங்க வேண்டும். குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பிறக்கின்ற குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்