பா.ஜனதாவினர் உண்ணாவிரதம்
திருவாரூர் மாவட்ட பா.ஜனதாவினர் உண்ணாவிரதம் இருந்தனர்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து மன்னார்குடி தேரடியில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் வி.கே.செல்வம், செந்தில்அரசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் ரகுராமன் வரவேற்றார். இதில், திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ.காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவுராம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான கலந்து கொண்டனர்.