கடலூரில் அய்யப்பா சேவா சங்க செயற்குழு கூட்டம்

கடலூரில் அய்யப்பா சேவா சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது

Update: 2022-08-14 17:24 GMT


கடலூரில் அய்யப்பா சேவா சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அன்னதான குழு நகர தலைவர் பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்வக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கடலூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பாலம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனால் அதனை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும். மாநகராட்சி மூலம் வழங்கப்படும் கழிவுநீர் கலந்த குடிநீரால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கடலூரில் உள்ள கோவில்களின் அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட செயலாளர் சுந்தரகண்ணன், கிராம தலைவர்கள் சந்தனகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், நகர துணை தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் சுரேஷ், ராஜா, செந்தில்குமார், அசோக், பாஸ்கரன், ஜெகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்