சபரிமலை புறப்பட்ட அய்யப்ப பக்தர்கள்
அய்யப்பபக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்.;
தோகைமலை அருகே நாகநோட்டக்காரன்பட்டியை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். இதையடுத்து கடந்த 17 நாட்களாக பக்தர்கள் விரதம் இருந்தனர். இதையடுத்து நேற்று பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பக்தி பாடல்களை பாடி கொண்டு காளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு பக்தி பாடல்களை பாடி தங்கள் விரதத்தை முடித்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பின்னர் 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு இங்கிருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.