குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் உற்சாக குளியல்

குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-12-24 18:45 GMT

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லை. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. அதாவது சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் விழுகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து செல்கிறார்கள். மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து செல்கிறார்கள்

நேற்றும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்